டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவரா நீங்கள்? செபி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் தங்கம்
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அது இந்தியாவில் லாபகரமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒரு கிராம் தங்கத்தின் விலையே ரூ11,300 உள்ளதால், நடுத்தர மக்கள் ஒரு கிராம் வாங்கவே சில காலத்திற்கு பணம் சேமித்து வாங்க வேண்டியுள்ளது.
ஆனால், டிஜிட்டல் தங்கத்தில், 1 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும். மேலும், தேவைப்படும் பொழுது, அதனை பணமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது தங்க நகையாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நகை வடிவமைப்பதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதன் காரணமாக பலரும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
கூகிள் பே, பேடிஎம், போன்பே, ஜோஸ் ஆலுக்காஸ், தனிஸ்க், எம்எம்டிசி, ஆதித்யா பிர்லா கேப்பிட்டல், சேப் கோல்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் இணையதளம் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
செபி எச்சரிக்கை
இந்த சூழலில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் செபி(SEBI) முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ETF தங்க பாத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட தயாரிப்புகள் மூலம் தங்கம் மற்றும் தங்கம் தொடர்பான முதலீடுகள் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

சில ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு 'டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருட்கள்' ஆகியவற்றில் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக செபியின் கவனத்திற்கு வந்துள்ளது. டிஜிட்டல் தங்கம், வழக்கமான தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகிறது.
ஆனால், இந்த "டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருட்களில் முதலீடு செய்வதற்கு பத்திரச் சந்தை வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் கிடைக்காது என்பதை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |