நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்... இன்னொரு அவுஸ்திரேலியர் உயிருடன் மீட்பு
Second Australian is found alive in Nepal: நேபாளத்தில் இரண்டாவது அவுஸ்திரேலியர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்குப் பிறகு, இரண்டாவது அவுஸ்திரேலியர் ஒருவர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டதை அல்பானீஸ் அரசாங்கம் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.
அடையாளம் வெளியிடப்படாத அந்த அவுஸ்திரேலியர், தூதரக அதிகாரிகளிடமிருந்து உதவிகளைப் பெற்று வருவதோடு, தனது குடும்பத்தினருடனும் பேசியுள்ளார்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாகக் கருத்தப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உள்ளது. வெள்ளப்பெருக்கில் மொத்தம் 3,925 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.
26 வயதான காரா செவரினோ என்பவர் நேபாள வெள்ளத்தில் சிக்கி, பத்திரமாக மீட்கப்பட்ட முதல் அவுஸ்திரேலியர் ஆவார். சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரக ஊழியர்களுடன் அவரது புகைப்படம் வெளியானது.
சம்பவத்தின் போது லாங்டாங் தேசிய பூங்காவிற்கு அருகில் செவெரினோ இருந்துள்ளார்; பேரழிவிலிருந்து தப்பிக்க டிராக்டரில் சென்றுகொண்டிருந்த ஒரு குழுவினருடன் இணைந்து அவர் உயிர் பிழைத்தார்.
காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் பலர், இந்து, பௌத்த, சமண மதங்களில் புனிதத் தலமாகக் கருதப்படும் கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்தனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், மலையேற்றத்திற்கு ஆண்டின் மிகவும் பிரபலமான பருவமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |