பாரீஸ் ஒலிம்பிக்... கண்ணீருடன் வெளியேறிய இன்னொரு குத்துச்சண்டை வீராங்கனை
பாலினம் தொடர்பில் விவாதத்திற்குரிய குத்துச்சண்டை வீராங்கனை, தைவானின் Lin Yu-Ting என்பவரால் உஸ்பெகிஸ்தானின் Sitora Turdibekova என்பவர் களத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.
பாலின தகுதி சோதனை
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை சேம்பியன் போட்டிகளில் கலந்து கொள்ள தைவானின் Lin Yu-Ting என்பவருக்கும் அல்ஜீரியாவின் Imane Khelif என்பவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் தங்கள் பாலின தகுதி சோதனைகளில் தோல்வி அடைந்தனர். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்த இருவரும் களம் காண அனுமதி அளித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு.
இதுவே தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடந்த போட்டியில் இத்தாலியின் Angela Carini வெறும் 46 நொடிகளில் களத்தில் இருந்து வெளியேறி தமது எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற்றது.
கண்ணீருடன் வெளியேறும் நிலை
ஆனால் நேற்று நடந்த போட்டியில் தைவானின் Lin Yu-Ting என்பவரால் உஸ்பெகிஸ்தானின் Sitora Turdibekova என்பவர் வெற்றிவாய்ப்பை பரிதாபமாக இழந்துள்ளார். மட்டுமின்றி, மூன்று சுற்றுகளிலும் Lin Yu-Ting வெற்றிபெற்றுள்ளார், அவற்றில் இரண்டு ஒருமனதாக, எதிர்தரப்பு கண்ணீருடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தைவானின் Lin Yu-Ting இதுவரை 54 போட்டிகளில் களம்கண்டு 14 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார். அல்ஜீரியாவின் Imane Khelif போன்று தைவானின் Lin Yu-Ting என்பவரும் பிறக்கும் போதே பெண் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை சேம்பியன் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |