பிரான்சைத் தாக்கிய இரண்டாவது புயல்: காரில் பயணித்த தம்பதியருக்கு நேர்ந்த பரிதாப முடிவு
பிரான்சை இரண்டு புயல்கள் தாக்கிய நிலையில், இரண்டாவது புயல் இரண்டு உயிர்களை பலிகொண்டுள்ளது.
வடக்கு பிரான்சில் Franklin புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயது முதிர்ந்த தம்பதியர் புயலுக்கு பலியாகியுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை, தங்கள் 70 வயதுகளிலிருக்கும் ஒரு கணவனும் மனைவியும் சென்ற கார் தண்ணீரில் மூழ்கியது. இரவு 10.00 மணி வாக்கில் அவர்களது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, தம்பதியர் தப்ப வழியின்றி உயிரிழந்துள்ளார்கள்.
வெள்ளிக்கிழமையன்று Eunice புயல் பிரான்சைத் தாக்க, அதனால் மின்சாரம் தடைபட்டது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை Franklin புயல் வீசியதால், மின்சாரம் சீர் செய்யப்படாததால், சுமார் 12,000 பேர் இருளில் தவிக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் மணிக்கு 135 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்றுக்களை எதிர்கொண்டது. மரங்கள் சரிந்ததால் பெரும்பாலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது, சில இடங்களில் முற்றிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
Eunice புயல் காரணமாக கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகள் பல நேற்று திறக்கப்படவில்லை.