ஹொங்ஹொங் ஆர்வலருக்கு இரண்டாவது சிறைத்தண்டனை... பிரித்தானியா கடும் கண்டனம்
Becond jail term handed to Hong Kong activist Joshua Wong: ஹொங்ஹொங் ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு இரண்டாவது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஹொங்ஹொங் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை பிரித்தானியாவும் அமெரிக்காவும் கண்டித்துள்ளன.
இருமுறை தண்டனை
30 வயதான வோங், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுச் சதிச் செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் இருமுறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே நபர் இவரே; அரசியல் எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அரசியல் கருத்து வெளிப்பாடு மற்றும் பங்கேற்புக்காக தனிநபர்களைக் குறிவைக்க தேசியப் பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு வோங்கின் தண்டனை ஒரு தெளிவான உதாரணம் என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான அனைத்து அநீதியான வழக்குகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்துவதாகவும்.
மேலும், சீன மற்றும் ஹொங்ஹொங் அதிகாரிகள், சீன-பிரித்தானிய கூட்டுப் பிரகடனத்தின் (1984) கீழ் ஹொங்ஹொங் மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஹொங்ஹொங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கூடுதல் தண்டனையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்ததுடன், வோங்கை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஹொங்ஹொங்கில் அடிப்படை சுதந்திரங்களுக்காக வாதிடுபவர்களை அமைதியாக்க, சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, வோங் 2020 டிசம்பர் முதல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது காட்டுகிறது என தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுவிப்பதற்கான
வியாழக்கிழமையன்று அமெரிக்கத் தூதரகம் அந்தத் தீர்ப்பை வன்மையாகக் கண்டித்த சிறிது நேரத்திலேயே, ஹொங்ஹொங் நீதித்துறை வழக்குகள் குறித்துப் பொறுப்பற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு அரசியல் தரப்புகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கூட இந்தத் தீர்ப்பைக் விமர்சித்துள்ளனர்.

வோங் ஏற்கனவே ஆறு ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டார்; அவர் 2027 ஜனவரியில் விடுவிக்கப்பட வேண்டியவர். இதனிடையே, வோங்கின் ஆதரவாளர்கள், அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் கூட்டுச் சதிகாரராகப் பெயரிடப்பட்டவரும், வோங்கின் நண்பரும், ஹொங்ஹொங் ஆர்வலருமான நாதன் லா தெரிவிக்கையில், ஹொங்ஹொங்கின் ஜனநாயகத்திற்கான தனது அமைதியான வாதப் பணிக்காக என் நண்பர் ஜோஷுவா வோங் மற்றொரு தண்டனையை அனுபவிப்பதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.

மேலும், இந்தத் தண்டனை ஒரு கேலிக்கூத்து என்றும், இது தனது மண்ணில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான எந்தவொரு நம்பிக்கையையும் நசுக்குவதில் சீனா உறுதியாக உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றும் நாதன் லா கூறியுள்ளார்.
முன்னாள் பிரித்தானிய காலனியான ஹொங்ஹொங் 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற 50 ஆண்டுகாலத் திட்டம் அதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, அந்நகரம் ஓரளவு சுயாட்சியையும் சுதந்திரங்களையும் தக்க வைத்துக் கொள்ளும். 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடந்த போராட்டங்கள் மீதான அடக்குமுறை மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, சீனா அந்த சர்வதேச ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக பிரித்தானியா கருதுகிறது.