பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 2வது சுற்றில் என்ன நடக்கும்? வெளியானது கருத்து கணிப்பு முடிவு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் மற்றும் 2வது சுற்றுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது.
2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் பெறவிட்டால், 2வது சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் 2வது சுற்றில் போட்டியிடுவார்கள், மற்ற வேட்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்நிலைியல், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் 2வது சுற்றில் ஒருவேளை மக்ரோன்-Valérie Pécresse மோதினால், இருவரும் 50% வாக்குகள் பெறுவார்கள் என BFM TV மற்றும் L'Express கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.
முதல் சுற்றில் மக்ரோன் முன்னிலை பெறுவார் என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
முதல் சுற்றில் தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரைன் லு பென் மற்றும் ரிபப்லிகன்ஸ் வேட்பாளர் Valérie Pécresse ஆகியோர் 17% வாக்குகளுடன் சமநிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கின்றன.
2வது சுற்றில் ஒருவேளை மக்ரோன்-Valérie Pécresse மோதினால், இருவரும் 50% வாக்குகள் பெற்று போட்டி சமனில் முடியும் என BFM TV மற்றும் L'Express கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.