கொரியன் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருக்கும்.
ஒவ்வொரு நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களுடைய சருமம் வேறுப்படும்.
கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளிவாக இருப்பார்கள்.
அது அவர்களின் மரபியல் சார்ந்த விடயம் அல்ல. அது அவர்கள் பின்பற்றும் ஒரு ஆரோக்கிய முறையாகவும் இருக்கும்.
எனவே நீங்கள் எப்போதும் இளமையுடன் முகம் பளிச்சென்று இருக்கவும் கொரியன் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
1. சரும பராமரிப்பு
காலையில் எழுந்தவுடன் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது இரசாயனங்கள் கலக்கப்படாத சருமத்தை ஈரப்பதமாகவும் திரவத்தை பயன்படுத்தவும்.
2. Sunscreen பயன்பாடு
பொதுவாகவே சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக Sunscreen பயன்படுத்தலாம்.
3. புளிப்பு வகை உணவு
கொரியன் பெண்கள் கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இது தோல் சுருக்கம் மற்றும் சரும எரிச்சல் போன்ற பிரச்சினையை தடுக்கும்.
4. நீர் அருந்துதல்
தண்ணீர் அருந்துவது உடலை எப்போதும் நீரேற்றதுடன் வைத்திருக்க உதவும். சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க கொரியன் பெண்கள் அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பார்கள்.
5. தூக்கம்
உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியமான காரணியாகும். கொரியன்கள் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். இரவு நேரத்தில் கண்விழிக்காமல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி
உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பாதுகாப்பிற்கும் உடற்பயிற்சியானது முக்கியமாக இருக்கிறது. எனவே சருமத்தை பாதுகாப்பதற்காக விறுவிறுப்பான நடைப்பயிற்சியை செய்கிறார்கள்.
7. மன அழுத்தம்
மன அழுத்தமானது சருமத்தை சீர்குலைய செய்யும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டு மன அழுத்தத்தில் இருந்து விடுப்படுவார்கள்.