குழந்தைகளின் ஆதரவும் தேவை: உலகக்கிண்ணப் போட்டியை பார்க்க விடுங்கள் - இங்கிலாந்து பயிற்சியாளர்
மெக்சிகோவுடனான இங்கிலாந்து அணியின் கால்பந்து போட்டியை காண விழித்திருந்தாலும், பிள்ளைகள் காலை பாடசாலைக்கு வர வேண்டும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, மெக்ஸிகோ போட்டி
FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடந்து வருவதனால், பல நாடுகளில் இரவு, அதிகாலை வேளைகளில் போட்டிகளை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
அதேபோல் பிரித்தானியாவிலும் இங்கிலாந்து மற்றும் மெக்ஸிகோ அணிகள் மோதும் போட்டி நள்ளிரவு 1 மணிக்கு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
மாணவர்கள் இப்போட்டியை காண இரவு 3 மணி வரை விழித்திருப்பார்கள் என்பதால்,அதிகாலை 1 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தை எவ்வாறு கையாள்வது என்று குடும்பங்களுக்குக் கூற விரும்பவில்லை என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) தெரிவித்தார்.
பயிற்சியாளர் வேண்டுகோள்
அதே சமயம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுசெல், குழந்தைகளை போட்டியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
போட்டி அதிகாலை 1 மணிக்கு தொடங்கும் என்பதால், மறுநாள் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நாளாக இருந்தாலும், குழந்தைகளைப் போட்டியைப் பார்க்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாமஸ், "பாடசாலைக்கு செல்ல இன்னும் நிறைய நாட்கள் உள்ளன, ஆனால் உலகக் கிண்ண போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது.
அவர்களைப் பார்க்க விடுங்கள். நான்கு நாட்களில் ஒரு முக்கியமான போட்டி நடைபெறவுள்ளது; அதற்கு அனைவரின் ஆதரவும், குறிப்பாக குழந்தைகளின் ஆதரவும் எங்களுக்குத் தேவை" எனக் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |