துப்பாக்கியுடன் டிரம்பின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்: அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வீட்டிற்குள் அத்துமீறிய நுழைய முயன்ற நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டிரம்பின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான மார்-ஏ-லாகோ(Mar-a-Lago) இல்லத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் சந்தேக நபர் ஒருவர் வடக்கு வாசல் வழியாக நுழைந்துள்ளார்.

கையில் ஷாட்கன் ரகத் துப்பாக்கி மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட கேன் ஒன்றுடன் சந்தேக நபரின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் உடனடியாக கண்டுபிடித்தனர்.
உடனடியாக கையில் உள்ள பொருட்களை கீழே போட்டு விட்டு சரணடையுமாறு அத்துமீறி நுழைந்த நபருக்கு அதிகாரிகள் கட்டளையிட்டனர்.
அந்த நபர் எரிபொருள் நிரப்பப்பட்ட கேனை கீழே வைத்தாலும், துப்பாக்கியை கீழே போட மறுத்துவிட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர்

துப்பாக்கியை கீழே போட மறுத்து அதே நிலையில், அதிகாரிகளை நோக்கி அந்த நபர் துப்பாக்கியை உயர்த்தியதால் ஒரு துணை பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரண்டு ரகசிய சேவை ஏஜெண்டுகள் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார், அத்துடன் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |