கடும் இழுபறிக்குப் பின்னர் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்... நெதன்யாகு அலுவலகம் அறிவிப்பு
காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
அங்கீகரிக்க வேண்டும்
ஒட்டுமொத்த அமைச்சரவை அதன் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அம்சங்கள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்த பிறகு, முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் போரின் நோக்கங்களை அடைவதை ஆதரிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு,
முன்மொழியப்பட்ட கட்டமைப்பை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது என அறிக்கை ஒன்றில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து முழு அமைச்சரவையும் வெள்ளிக்கிழமையே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலான ஒப்புதலை அளிக்கும் என்றே கூறப்படுகிறது. முன்னதாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில்,
முடிவுக்கு வருகிறது
இஸ்ரேல் இராணுவம் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் 77 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க இஸ்ரேல் தாமதப்படுத்தி வந்ததுடன், ஹமாஸ் படைகளே தாமதத்திற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியது.
வியாழக்கிழமையே ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்தியதுடன் இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 77 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்னனர். இது நெதன்யாகு அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றே கூறப்பட்டது.
ஏற்கனவே இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜனவரி 19ம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருகிறது. இதனால் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்துவந்த 15 மாதகால கொலைவெறித் தாக்குதல் முடிவுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |