277 பந்தில் முதல் சதம் விளாசிய ஆப்கான் வீரர்: வங்காளதேசத்திற்கு எதிராக சாதனை
Sediqullah Atal maiden test century vs bangladesh: வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் செதிகியுல்லா அடல் முதல் சதத்தை பதிவு செய்தார்.
அபு தாபியில் நடந்து வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில், ஆப்கானிஸ்தானின் செதிகியுல்லா அடல் முதல் சதம் அடித்தார்.
அபு தாபி டெஸ்ட்
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் அபு தாபியில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி நிர்ணயித்த 479 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி ஆப்கானிஸ்தான் 5வது நாளில் துடுப்பாடி வருகிறது.
25 வயது தொடக்க வீரரான செதிகியுல்லா அடல் (Sediqullah Atal) நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். 277 பந்துகளை எதிர்கொண்ட அடல் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.
இதன்மூலம் 4வது இன்னிங்ஸில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் எனும் சாதனையை படைத்தார்.
