தமிழகத்தில் உயிரிழந்த கணவரின் முகத்தை பார்க்கனும்: குவைத்தில் உள்ள மனைவி கண்ணீர்
தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் உயிரிழந்த கணவரின் முகத்தை பார்க்க வேண்டும் என குவைத்தில் உள்ள மனைவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
கணவர் மரணம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திப்புராஜபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி ரவிச்சந்திரன்(50). இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி ராமலட்சுமி(45) ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கணவரின் இறப்பு குறித்து ராம லட்சுமிக்கு தகவல் வந்துள்ளது. ஆனால், ராமலட்சுமியை சொந்த ஊருக்கு செல்வதற்கு வீட்டின் உரிமையாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
கணவரின் முகத்தை பார்க்கணும்
இதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து ராமலட்சுமியை சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரனின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், சொந்த ஊருக்கு ராமலட்சுமி வந்தால் தான் ரவிச்சந்திரனின் உடலை அடக்கம் செய்யப்படும் எனவும் கூறினர்.
இதனிடையே, தனது கணவரும் முகத்தை பார்க்க வேண்டும் என குவைத்தில் உள்ள மனைவி ராமலட்சுமி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |