எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது.. அது திராவிடரா? கிண்டலடித்த சீமான்
கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால், எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது அது திராவிடரா என எருமையை உதாரணமாக வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கம் செலுத்தியது.
இதன் போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், மோடி குறித்த இளையராஜா கருத்து குறித்தும், திராவிடர் குறித்த யுவன் சங்கர் ராஜாவின் கருத்து குறித்தும் கருத்துக் கேட்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீமான், புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போன் என்கிறார்கள். இதில் நான் கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.
இது இளையராஜாவின் தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அவருடைய கருத்தை நாம் ஏற்கிறோமா? எதிர்க்கிறோமா என்பது வேறு.
அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை, எனென்றால், அவரை விட மோடிய புகழ்ந்து பேசியவர்கள் தான், இப்போது இளையராஜாவை திட்டுகிறார்கள் என கூறினார்.
பின் யுவனின் கருத்து குறித்த பேசிய சீமான், முதலில் யுவன் தெளிவு பெற வேண்டும். ஒருவருக்கு இரண்டு அடையாளங்கள் கிடையாது, ஒன்று திராவிடராக இருக்க வேண்டும் அல்லது தமிழராக இருக்க வேண்டும்.
யுவன் குழம்பக்கூடாது, அவர் பெருமைக்குரிய தமிழன். அனைத்தையும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அதுவே நோய் ஆகிவிடும்.
கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால், தென் ஆப்பிரிக்காவில் கூட கருப்பாக இருக்கிறார்கள், அவர்களெல்லாம் திராவிடர்களா? எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது, அது திராவிடரா?
எங்கள் இனத்தின் நிறம் கருப்பு, நாங்கள் கருப்பர்கள் தான். உழைக்கும் மக்களின் தோல் கருப்பாக தான் இருக்கும், உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் தோல் தான் மினுமினுப்பாக வெள்ளையாக இருக்கும்.
எருமை மாடு என நான் ஒப்பிடு செய்யவில்லை, இது ஒப்பிடும் இல்லை. உதாரணம் வேறு ஒப்பிட வேறு என சீமான் தெரிவித்தார்.
நேரலை: 'அச்சு ஊடகங்களின் அரசர்' பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! https://t.co/VCg2qEX9Z2
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) April 19, 2022