சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான்
கிறித்துவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்தார்.
சீமான் கேள்வி
மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் இல்லை, அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி விட்டனர் என சீமான் கூறியது சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை பெற்ற நிலையில் 'அநீதிக்கு எதிராக என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் போராடியிருக்கிறார்களா?' என கேள்வி எழுப்பிய சீமான், நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு வாக்களிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
சாத்தானின் குழந்தைகள்
இந்நிலையில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள சீமான், 'குர் ஆன் அநீதி செய்பவர்களை சாத்தான் என்று கூறுகிறது. ஆட்சியாளர்கள் அநீதி இழைப்பதால் அவர்கள் சாத்தான்கள், ஆகவே அவர்களை ஆதரிப்பவர்களும் சாத்தான்கள்.
குர் ஆன் அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை சாத்தனின் நண்பர்கள் என்கிறது. நான் அவர்களை சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன்.
அதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். நீங்கள் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? மதத்தை வைத்து உலகில் மனித கூட்டத்தை கணக்கிட்டதில்லை. ஆக மதத்தை விட, சாதியை விட மொழி தான் அடையாளம்.
இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழர்கள். பெரும்பான்மையான தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பை கழட்டி அடித்து விடுவேன். மதம் மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறாதது' என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |