என் பயணம் என் கால்களை நம்பி தான்.., தனித்து போட்டியிடுவதாக சீமான் உறுதி
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார்.
சீமான் பேசியது
தமிழக மாவட்டமான தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழக மீனவர் விவகாரத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர், தமிழக முதலமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு நடந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என்னுடைய பயணம் என் கால்களை நம்பியே உள்ளது. அடுத்தவர்களின் கால்களை நம்பி நான் இந்த பயணத்தை ஆரம்பிக்கவில்லை.
எங்களுடைய கொள்கைகளும் மற்ற கட்சிகளுடன் ஒத்துப்போகவில்லை. வியாபாத்திற்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் அவர்களுடன் எப்படி சேர முடியும்.
ஊழல் பட்டியல் தயார் செய்வோம் என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி சொல்வதை தான் திமுகவும் சொல்கிறது. இது குரங்கு அப்பம் பிச்ச கதை போல உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |