பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்.., சீமான் ஆவேசமான பிரச்சாரம்
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார்.
சீமான் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல, பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தனித்து போட்டியிடுகிறது. தர்மம் வெல்லும் என்பது உண்மையானால் ஒரு நாள் நாங்கள் வெல்வோம்.
நீங்கள் நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற வைத்தால் உங்களது குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பார். இந்த ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அப்போது, நீங்கள் படைக்கும் வரலாற்றை வருங்காலம் பேசும்.
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், மாற்று அரசியலுக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |