அதானி மீது பாயாமல் ராமதாஸ் மீது பாய்வதா? முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த சீமான்

Dr. S. Ramadoss M K Stalin Seeman Gautam Adani
By Sathya Nov 26, 2024 07:51 AM GMT
Report

அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன ராமதாஸ் மீது பாய்வதா என்று முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ், அதானி நிறுவன ஊழல் விவகாரம் தொடர்பாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது," ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவரது அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை" என்று கூறியிருந்தார்.

தற்போது, இவரின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன ராமதாஸ் மீது பாய்வதா? திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்குமான உறவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையை முன்வைத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின், ராமதாஸை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதானி மீது பாயாமல் ராமதாஸ் மீது பாய்வதா? முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த சீமான் | Seeman Condemns Mk Stalin And Ramadoss Issue Adani

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காகப் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ராமதாஸை சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும். முதல்வர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன?

அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ராமதாஸ்? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றமடைவதேன்? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா? எனும் கேள்விக்கு, ‘ஆம்! இல்லை!’ எனும் பதிலைக் கூறாது, ‘அவருக்கு வேறு வேலையில்லை’ எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா?

நாளை என் பிறந்தநாளில் இதை செய்ய வேண்டாம்.., அமைச்சர் உதயநிதி கோரிக்கை

நாளை என் பிறந்தநாளில் இதை செய்ய வேண்டாம்.., அமைச்சர் உதயநிதி கோரிக்கை

பதில் சொல்ல நேர்மையற்ற முதல்வர் ஸ்டாலின் கேள்வி கேட்ட ராமதாஸை நோக்கி, ‘வேலையில்லை’ எனப் பாய்வது அரசியல் அறம்தானா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஸ்டாலின், அப்போது வேலையில்லாதுதான் அறிக்கைகளை விடுத்தாரா?

“எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இருக்கிறது.

அதானி மீது பாயாமல் ராமதாஸ் மீது பாய்வதா? முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த சீமான் | Seeman Condemns Mk Stalin And Ramadoss Issue Adani

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இப்போதுவரை வாய்திறக்க மறுப்பதேன்? அதானி லஞ்சம் கொடுத்தாரெனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? இல்லை! மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களென்றால், அதானி குழுமத்திடமிருந்து தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்வரே!

ராமதாஸ் கூறியதுபோல, அதானியை ரகசியமாக இல்லத்தில் சந்திக்க வேண்டிய தேவையென்ன வந்தது? “அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை” என விளக்கம் கொடுக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டதாக யாருமே கூறவில்லையே! இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி மையத்திடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டதே, அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துதான் என்பதுதானே குற்றச்சாட்டு. அதற்கு திமுக அரசின் கருத்தென்ன?

இவ்விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் மௌனத்துக்கானக் காரணத்தை நாடும், ஏடும் அறியும். மோடியின் அரசியலை எதிர்ப்பதாகக் கோரும் முதல்வர் ஸ்டாலினும் இச்சிக்கலில் அமைதி காப்பதேன்?

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்? ‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாய வேண்டிய முதல்வர் ஸ்டாலின், உண்மையைச் சொன்ன ராமதாஸ் மீது பாய்வதன் அரசியலென்ன?

அதானியுடன் பாஜக அரசு நேரிடையான உறவில் இருக்கிறதென்றால், திமுக அரசு கள்ள உறவில் இருக்கிறதென்பதைத்தானே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே, முதல்வர் ஸ்டாலின் கெளதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ராமதாஸ் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US