திராவிட பன்றிகளின் மீதுள்ள உண்ணிகள்! பேசாம இருக்கனும்.. பேரறிவாளன் விடுதலை தொடர்பில் சீமான் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மீது சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயை கட்டிகொண்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு என்ன வேலை இருக்கிறது? சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு ஏதாவது வேலை செய்யனும்தானே? வாங்கிய ஓட்டுக்கு ஏதாவது கத்திதானே ஆக வேண்டும்? இதுவரையில் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக காங்கிரஸ் போராடி இருக்கிறதா? ஏன் காங்கிரஸ் போராடுவதில்லை.
ராஜீவ் காந்தி ஒரு சர்வதேச பயங்கரவாதி ?
— சோழர்கள் (@TheGreatCholas) May 20, 2022
திராவிட பன்றிகளின் மீதுள்ள உண்ணிகளை போல 5 , 10 சீட்டு வாங்கிட்டு பேசாம இருக்கனும் ??
பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கிறோம் என்று பேசிட்டு திரிய கூடாது
காங்கிரஸ் கட்சிக்கு சீமான் எச்சரிக்கை ❤️❤️❤️ pic.twitter.com/0OjmrbYdLa
மக்களுக்கான பிரச்சனையே காங்கிரஸ் கட்சிதான். இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி என் இனமக்களை கொன்றழித்தனர். சிங்களருக்கு ஆயுதங்களை கொடுத்து என் இன மக்களை கொன்று குவித்தனர்.
இத்தனையையும் மறந்துவிட்டுதானே தமிழர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். அதுக்கு நன்றிக் கடன்தானா பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கிறது காங்கிரஸ் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு விசுவாசம் காட்டனும் நினைத்து கொண்டு பேசுகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
திராவிட பன்றிகளின் மீதுள்ள உண்ணிகளை போல 5, 10 சீட்டு வாங்கிட்டு பேசாம இருக்கனும்.
ஏன் வாயை மட்டும் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தனும்? மேலே மூக்கையும் சேர்த்து கட்டிக் கொண்டு போராட்டம் நடத்துங்களேன் என சீறியுள்ளார்.