நாட்டில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.., விஜயின் மாநாடு குறித்து சீமான் விமர்சனம்
தமிழக வெற்றி கழக தலைவர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் விமர்சித்து பேசியிருந்த நிலையில் மாநாடு குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தவெகவினருக்கு வேலை இல்லை
மதுரையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காலையில் இருந்தே திரண்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான வசதிகளும் எந்தவித குறைபாடும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் என்ன பேச போகிறார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழக மாநாடு தொடங்குவதற்கு முன்பே தொண்டர்கள் கூடியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் நாட்டில் நிறைய பேருக்கு வேலை இல்லை என்பதை காட்டுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல, மாநாட்டில் சீமான் ஒழிக என்று தவெக நிர்வாகிகள் கோஷம் எழுப்பியதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள் என்றால் எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள் என்றும் புது கருத்தை தெரிவித்தார் சீமான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |