சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு! தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு
சசிகலா நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள திநகர் இல்லத்தில் சசிகலா, ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே நம் இலக்கு என பேசினார்.
இந்நிலையில் சென்னையில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.அவருடன் இயக்குநர் பாரதிராஜாவும் உடன் வந்துள்ளார்.
தமிழக அரசியலில் தீவிரமாக இறங்குவேன் என சசிகலா ஏற்கனவே கூறியுள்ள நிலையில் சீமானின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.