ஊடகங்கள் ஏன் அதை ரசிக்கிறீர்கள்? விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் ஆவேசம்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்த கேள்விக்கு, நான் குற்றவாளியாக இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுங்கள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி புகார்
சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது அவர், "சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்" என்றார்.
மேலும், "சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்" எனவும் கூறினார்.
இந்த புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று இரவு 8மணிநேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.
சீமான் கூறியது
இந்நிலையில், சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அவர் அந்த பேட்டியில்,"ஒருவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு உண்மை இல்லை என்றால் யாரும் பதில் அளிக்க அவசியம் இல்லை. பத்திரிகையாளர்கள் நல்ல கேள்வியை தான் கேட்க வேண்டும்.
நான் குற்றவாளியாக இருந்தால் என்னை எப்படி இத்தனை லட்சம் பேர் பின்தொடர்வார்கள். என் மீது 11 ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதே ஏன் நீங்கள் ரசிக்கிறீர்கள்? எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்" என்றார்.
மேலும் அவர், "இந்த விவகாரத்தை விட்டுவிட்டு அவசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். அவசியமற்ற கேள்விகளை கேட்க வேண்டாம். நான் கூறும் வார்த்தையானது வெறும் வார்த்தையாக இல்லாமல் தலைமுறையை வழிநடத்துவது போன்று இருக்க வேண்டும். உண்மையாகவே, நான் குற்றவாளியாக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |