பொலிஸாரிடம் மன்னிப்பு கேட்ட சீமானின் மனைவி.., அங்கு நடந்தது என்ன?
வழக்கு ஒன்றில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
என்ன நடந்தது?
நடிகை விஜயலட்சுமி கொடுத்த வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

இது வலதுசாரி பிரச்சாரத்தின் புத்திசாலித்தனம்.., இந்தி குறித்த ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக பதில்
அப்போது, அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சம்மனை கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டுக்குள் செல்ல முயன்ற காவலரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்ததாக தெரிகிறது.
மேலும், அவரிடம் இருந்த துப்பாக்கியை கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிறது. அந்த நேரத்தில் வாக்குவாதம் முற்றி காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்மனை கிழித்த நாம் தமிழர் நிர்வாகி மற்றும் காவலாளியை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர், வீட்டின் காவலாளி ராணுவ வீரர் என்பதால் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், பொலிஸார் ஒட்டிய சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என்றும் கூறி சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதோடு மீண்டும் இந்த சம்மனை ஒட்டிக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி சீமான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓசூர் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |