விஜயுடன் கூட்டணி எனக்கு சரிவராது- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை கோச்சடை பகுதியில் நடந்தது.
இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது..,
மும்மொழி கொள்கையில் திமுக., அதிமுக, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?. இந்தியை திணித்தவர்களுடன் திமுக கூட்டு சேர்ந்திருந்தது. இனி தேர்தல் நேரம் என்பதால், இந்தி நாடகத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
இந்தி மொழி தேவைப்பட்டால், தேவைப்படும் இடங்களில் கற்றுக்கொள்ளலாம் என்பதே எங்களின் கருத்து. ஆனால் அதனை திணிப்பதை ஏற்கமாட்டோம்.
இந்தியை திமுக உளமாற எதிர்க்கவில்லை. இந்தி படித்தால்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்றால், வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைகாக வருகிறார்கள்?
ஒரு நடிகரின் ரசிகராக இருப்பவர்கள் என்னிடம் வரமாட்டார்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் என்னை தேடமாட்டார்கள். போராட்டக்களத்தில் தலைவனை தேடுபவர்கள் மட்டுமே என்னுடன் இருப்பார்கள்.
வருண்குமார் ஐபிஎஸ், திமுக காரர் போல பேசுகிறார். இவரது வேலையே, எங்கள் கட்சி நிர்வாகிகளின் செல்போனை நோட்டமிடுவதுதான். உயரதிகாரிகள் வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை. ஆகவே விஜய்யுடன் கூட்டணி எனக்கு சரிவராது என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |