‘அண்ணே பாட்டுனே’ என ஆசையாக கேட்ட தம்பி.. தேர்தல் பிரசாரத்தில் பாட்டு பாடி அசத்திய சீமான்: வைரலாகும் வீடியோ
தேர்தல் பிரசாத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மார்ச் 28 குறிஞ்சிப்பாடி தொகுதியில் வடலூர் பேருந்து நிலையம் அருகே சீமான் தேர்தல் பரப்புரை செய்தார்.
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிற்காதே..!
pic.twitter.com/Q4DRO5zNL2
— சீமான் (@SeemanOfficial) March 28, 2021
அப்போது, கூட்டத்தில் இருந்த தம்பி ஒருவர் ‘அண்ணே பாட்டுனே’ என கேட்க, சீமான் ‘ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிற்காதே..! என பாட்டு பாடி அசத்தினார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.