இது அவமானம் இல்லை.., ஆடு மாடுகள் முன்பு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்றது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சீமான் உரை
சில காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகிறார். ஆட்சி அதிகாரத்தை என்னிடம் கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதியையும் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மதுரையில் ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "ஆடு மாடுகள் மேய்ப்பது அவமானம் இல்லை. திருமால், பெருமாள், கண்ணன், இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்த்தனர்.
கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன். இனி நீங்கள் திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று சொல்லி திட்டாதீர்கள். மாடு வளர்ப்பது அவமானம் என்றால் ஏன் பால் குடிக்கிறீர்கள்?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |