ஆ.ராசாவின் மனைவி மரணம்! நாம் தமிழர் சீமான் வேதனையுடன் வெளியிட்ட பதிவு
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரியின் மறைவூக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
இவரின் மரண செய்தியைக் கேட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
— சீமான் (@SeemanOfficial) May 29, 2021
(1/3) pic.twitter.com/nCSDNhqN1e
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
கொள்கைப்பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் தவிர்க்க இயலா முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்கிற அண்ணன் ஆ.ராசா அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தொடர்ந்து இயங்கவும் பெருந்துணையாய் நின்ற அவரது இணையரின் மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். (2/3)
— சீமான் (@SeemanOfficial) May 29, 2021
கொள்கைப்பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் தவிர்க்க இயலா முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்கிற அண்ணன் ஆ.ராசா அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தொடர்ந்து இயங்கவும் பெருந்துணையாய் நின்ற அவரது இணையரின் மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
உயிர்த்துணையின் இழப்பு தந்த வலியில் சிக்குண்டு, பெருந்துயரத்தில் வாடும் அண்ணன் ஆ.ராசாவுக்கு ஆறுதலாகத் துணைநிற்கிறேன். அண்ணியார் பரமேஸ்வரி அவர்களது இழப்பால் வாடும் அண்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்துணையின் இழப்பு தந்த வலியில் சிக்குண்டு, பெருந்துயரத்தில் வாடும் அண்ணன் ஆ.ராசாவுக்கு ஆறுதலாகத் துணைநிற்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) May 29, 2021
அண்ணியார் பரமேஸ்வரி அவர்களது இழப்பால் வாடும் அண்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். (3/3)