பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சீமான் ஆதரவு
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவான கருத்துகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியானது.
இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் நேற்று மூளைச்சாவடைந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சீமான் ஆதரவு
இந்நிலையில், 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நடிகர் அல்லு அர்ஜுன் கைது என்பது தேவையில்லாத ஒன்று. அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது விபத்து, அதற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ஒருவர் உயிரிழந்தார் அதற்கு துறை சார்ந்த அமைச்சரை கைது செய்வார்களா?
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். ஒரு நடிகர் அவ்வளவு தான் செய்ய முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |