திமுக-வை குறி வைத்து எதிர்ப்பது ஏன்? கமலின் வருகை வாக்கை பிரிக்குமா...சீமான் கொடுத்த தெளிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனை சந்தித்து பேசிய போது, நடிகர் கமல் ஹாசனின் அரசியல் நுழைவு போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக இப்போது நாம் தமிழர் கட்சி தான் வாக்கு வங்கியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் நிச்சயம் கடந்த தேர்தல்களை விட, இந்த முறை அதிக வாக்குகள் பெறும் என்று கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், திமுகவை எதிர்த்து பேசி வரும் சீமானிடம் பிரபல ஊடகமான பிபிசி தமிழ் பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர் பிரபாகரனை சந்தித்த போது, இருள் சூழ்ந்த நிலையில், ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தில் பேசியதாக கூறியுள்ளார்.
மேலும், அதிகார ஆட்சியில் இருந்த போது, அதிமுகவை விட, திமுகவே அதிக ஆதிக்கம் செலுத்தியதாகவும், அது அண்ணன் பிரபாகரனுக்கு செல்ல வேண்டிய பொருட்களை தடுத்ததாகவும், இது அவர் மேல் ஆணை என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நான் மட்டும் இப்போது இல்லையென்றால், தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது, போர் போன்ற அனைத்தையும் மூடி மறைத்திருப்பார்கள், போர் என்று ஒரு நடந்தது போன்றே காட்டியிருக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.