தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும், அன்பும்...! சீமான்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வேல கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து, மக்களுக்கு உடனடியாக வீடுகளுடன் கூடிய மாற்று வசிப்பிடங்கள் வழங்க விலியுறுத்தியும் நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்றார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த பின், அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்த சீமான், சில நொடிகளில் மயங்கி விழுந்தார்.
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial திடீர் மயக்கம்.@NaamTamilarOrg pic.twitter.com/KzSmf2rPFr
— Prakash Pandian P (@PrakashPandianP) April 2, 2022
இதனையடுத்து, ஆம்புலன்ஸில் வைத்து சீமானுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவர் நலம் பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சீமானின் உடல்நலம் குறித்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் நலம் விசாரித்தனர்.
அந்த வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமானை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்.
இதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்கள் எதிரி அல்ல...இதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது! சங்கக்கார அறிக்கை
எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!@CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) April 3, 2022
இதுகுறித்து சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.