இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரைபோல் சித்தரிப்பு: சீமானின் எச்சரிக்கை.,பேனர்கள் கிழிப்பு
தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளுக்கு, நாம் தமிழர் சீமானின் எச்சரிக்கையால் பாதுகாப்பு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிங்டம்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'கிங்டம்' என்ற தெலுங்கு திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போலவும், இலங்கை தமிழர்களைப் பற்றி பேசுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிங்டம் திரைப்படத்தில் இலங்கை தமிழர்கள் குற்றப்பரம்பரை போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மலையகத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்று காட்சிகள் இருப்பதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களில் 'கிங்டம்' திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
முன்னதாக சீமானின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |