சசிகலாவுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலாவின் 67-வது பிறந்த நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும் பிறந்தநாள் என்பதால், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், தொண்டர்கள் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று சசிகலா உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது, என் பிறந்தநாளை அம்மாவுடன்தான் கொண்டாடியுள்ளேன். அவர் சென்ற பின்னர், இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாடவே ஆசை வருவதில்லை.
எனது பிறந்தநாளை கொண்டாட விரும்பும் தொண்டர்கள், ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்து கொண்டாடுங்கள் என்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது சசிகலா இவ்வாறு தெரிவித்தார்.
எனினும், சசிகலா ஆதரவாளர்கள் அவரின் பிறந்தநாளை கொண்டிடாடி வருகின்றனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன் pic.twitter.com/jOpmleFKmz
— சீமான் (@SeemanOfficial) August 18, 2021
ட்விட்டரில் சீமான் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன் என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.