சசிகலாவை சந்தித்த சீமான் இறுதியாக எடுத்த தில்லான முடிவு! வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை
சசிகலாவை சீமான் சந்திது பேசி வந்த பின்பு, பல தகவல்கள் வெளிவந்த நிலையில், அதற்கு எல்லாம் தெளிவான பதிலை சீமான் அளித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலா சில முக்கிய நபர்களை சந்தித்தார்.
அதன் படி பாரதிராஜாவும், அமீர் போன்றோர் சந்தித்தனர். ஆனால், சரத்குமாரும், சீமானும் திடீரென்று சசிகலாவை சந்தித்து பேசியது தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக சீமான் எப்போதுமே திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியே நாங்கள் தான் என்று அடிக்கடி கூறுவார். அவர் ஏன் சசிகலாவை சந்திக்க வேண்டும்? சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற குழப்பம் நிலவியது.
சசிகலாவை சந்தித்த சரத்குமார், பாரதிராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், ஆனால் சீமான் மட்டும் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தார்.
234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி!
— சீமான் (@SeemanOfficial) March 1, 2021
117 பெண் வேட்பாளர்கள்!
117 ஆண் வேட்பாளர்கள்!
மார்ச் 07, ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் - சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடல்
உயிர்க்கினிய உறவுகள் அனைவரும் எழுச்சியும் புரட்சியுமாக திரள்வோம்!#வெல்லப்போறான்_விவசாயி pic.twitter.com/gCvXg6B5jn
சசிகலாவை சீமான் சந்தித்த போது, அவர் வைத்த கோரிக்கை இது தானாம், அதாவது, பாஜக எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்.
எப்போதுமே பாஜகவால் அதிமுக, அமமுகவுக்கு ஆபத்து இருக்கிறது. அதனால், ஆதரவு நிலைக்கு மட்டும் அந்த கட்சியுடன் சேர வேண்டாம் என்று சீமான் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால், சசிகலா இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன. அதுமட்டுமின்றி சீமானை, கமல் விடாமல் துரத்திக் கொண்டிருப்பதால், சீமான் ஒருவேளை கூட்டணி வைத்துவிடுவாரோ, சசிகலாவை வேறு சந்தித்து இருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் எழுந்தது.
இந்நிலையில், தற்போது அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், 234 வேட்பாளர்களின் பட்டியலை, ஒரே மேடையில் வரும் 7-ஆம் திகதி அறிவிக்க போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்தனை வேட்பாளர்களையும் அதே மேடையில் அறிமுகம் செய்து வைக்கவும் போகிறாராம். எப்போதுமே கூட்டணி கிடையாது என்று கூறும் சீமான், இந்த முறையும் சொன்னது போன்றே செய்து காட்டியுள்ளார் என்று கூறலாம்.