வெல்வான் விவசாயி! நாளை தமிழக தேர்தல் நடக்கும் நிலையில் கெத்து காட்டிய சீமான் தம்பிகள்... மக்களை ஈர்த்த செயல்
நாம் தமிழர் கட்சி தம்பிகள் வெல்வான்விவசாயி என்ற டேக்கை நேற்று முதல் டுவிட்டரில் இந்திய அளவில் டிரண்ட் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 6ஆம் திகதியான நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து நேற்று 4ஆம் திகதி மாலை ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Pic of day ?#சீமான் #வெல்வான்விவசாயி pic.twitter.com/tyeMrGxYfS
— தமிழன் சத்யா 2.0 (@tamilansathya01) April 4, 2021
இந்த நிலையில் நேற்று முழுவதும் டுவிட்டரில் நாம் தமிழர் கட்சியினர் #வெல்வான்விவசாயி என்ற டேக்கில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு டிரண்ட் செய்தனர்.
அதில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் எந்த மாதிரியான நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
Please do vote for NTK in "Vivasaayi" Symbol this time.
— Manoj (@jstanothahuman) April 4, 2021
Vote for Change , Vote for NTK ✊#வெல்வான்விவசாயி pic.twitter.com/BYp5zENoT0