இன்னும் இரண்டு நாட்களில்... சுவிட்சர்லாந்துக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
ஞாயிற்றுக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால், சுவிட்சர்லாந்து செல்லும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மின்னணு முறையில் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும்.
அக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அக்டோபர் மாதம் 12ஆம் திகதி அமுலுக்கு வருவதைத் தொடர்ந்து, அத்திட்டத்தை தனது விமான நிலையங்களில் படிப்படியாக அறிமுகம் செய்ய சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
இனி பயண ஆவணங்களில் அதிகாரிகள் முத்திரை பதிப்பதற்கு பதிலாக, பயணிகள் மின்னணு முறையில் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும்.
அவ்வகையில், முதலில் பாஸல் மற்றும் ஜெனீவா விமான நிலையங்களில் இம்மாதம், அதாவது, அக்டோபர் 12ஆம் திகதி முதலும், சூரிக்கில் நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதலும், Lugano, Dübendorf, Bern ஆகிய விமான நிலையங்களில் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் EES திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து படிப்படியாக ஷெங்கன் பகுதி முழுவதும் EES திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
EES திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தபின், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அதிகாரிகள் பயண ஆவணங்களில் முத்திரை பதிக்கும் நடைமுறை முழுமையாக முடிவுக்கு வந்துவிடும்.
இந்நிலையில், EES திட்டம் மூலம், சுவிட்சர்லாந்தில் வாழ உரிமை இல்லாதவர்களை எளிதாக, நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காணமுடியும் என்றும் சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |