நோபல் பரிசை எதிர்பார்த்திருந்த ட்ரம்புக்கு ஏமாற்றம்: பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியுமா?
நோபல் பரிசை எதிர்பார்த்து காத்திருந்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நோபல் பரிசு யாருக்கு?
ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், வெனிசுலா நாட்டவரான மரியா கொரினோ (María Corina Machado) என்னும் பெண் அரசியல்வாதிக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மரியா, வெனிசுலா நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அயராது உழைத்ததற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 10, 2025
The Norwegian Nobel Committee has decided to award the 2025 #NobelPeacePrize to Maria Corina Machado for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to… pic.twitter.com/Zgth8KNJk9
இஸ்ரேல் ஹமாஸுக்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக ட்ரம்ப் முயற்சிகள் எடுத்தும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆக, அவர் தனது கோபத்தை எப்படி வெளிப்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |