சுயமாக செய்துகொண்ட கருக்கலைப்பு: கொலை வழக்கை எதிர்கொள்ளும் பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் அமுலில் இருக்கும் சட்டத்தை பொறுத்தமட்டில், கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது, தனியொருவரின் கொலையாகவே கருதப்படுகிறது.
Lizelle Herrera என்ற 26 வயது பெண்மணியின் விவகாரத்தில், அவர் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டாரா அல்லது எவருக்கேனும் கருக்கலைப்புக்கு உதவினாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை Lizelle Herrera கைது செய்யப்பட்டதுடன், விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், Herrera மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை நகர நிர்வாகம் கூற மறுத்துள்ளது.
இதனிடையே, கருக்கலைப்புக்காக கொலை வழக்கு ஏதும் சுமத்த முடியாது என டெக்சாஸ் சட்ட விரிவுரையாளர் ஸ்டீபன் விளாடெக் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸில் ஆறு வாரங்களுக்கும் மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதை தடை செய்திருப்பது மாநிலத்தில் கருக்கலைப்பு எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளது.
மட்டுமின்றி, கருக்கலைப்பு செய்ய உதவும் மருத்துவர்கள் அல்லது உதவுவோருக்கு எதிராக வழக்குத் தொடர தனிப்பட்ட குடிமக்களுக்கும் உரிமை அளித்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தை பொறுத்தமட்டில் கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது கொலை செய்வதற்கு நிகரான குற்றமாகும், ஆனால் உரிய காரணங்களுக்காக மருத்துவர் ஒருவரால் கருக்கலைப்பு முன்னெடுக்கப்பட்டால் அது குற்றமாகாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.