சுவிட்சர்லாந்தில் ஒரு ஃப்ராங்குக்கு வீடு விற்பனை... ஆனால் வாங்க ஆளில்லை: காரணம்?
சுவிட்சர்லாந்தில் ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்கப்படும் வீடுகளை வாங்க ஆளில்லாததால், அந்த திட்டமே விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
சுவிஸ் மாகாணமான Ticinoவில் அமைந்துள்ள Gambarogno கிராமத்தில், 2019ஆம் ஆண்டு முதல், ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆனால், வீடுகளை வாங்கியவர்கள் சிலர், ஏன்தான் அந்த வீடுகளை வாங்கினோமோ என கவலைப்படும் அளவுக்கு பிரச்சினைகள் இருந்தன.
அந்த வீடுகள் ஒரு ஃப்ராங்குக்கு விற்கப்பட்டாலும், அவற்றை பழுதுபார்ப்பதற்கே அதிக செலவிடவேண்டியிருந்தது. அத்துடன், அந்த வீடுகள் வெகு தொலைவில் உள்ளதால், அந்த வீடுகளை செப்பனிடுவதற்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு சரியான பாதைகள் முதலான வசதிகள் இல்லாமலிருந்தன.
சில வீடுகளில் தண்ணீர் வசதி இருந்தாலும், மின்சாரமோ, எரிவாயுவோ இல்லை. அத்துடன் சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. மின்சார இணைப்பு பெறுவது மிகவும் கடினமான விடயமாகவும் இருந்தது.
இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக யாருமே அந்த வீடுகளை வாங்கவில்லை. ஆகவே, ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு என்ற திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.