Semiya Chicken Briyani: நாவூறும் சுவையில் சேமியா சிக்கன் பிரியாணி: ரெசிபி இதோ
பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
அதிலும் சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணிகளை தான் அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம்.
அந்தவகையில், கொஞ்சம் வித்யாசமாக சேமியா வைத்து சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சேமியா- 1 பாக்கெட்
- சிக்கன்- 150g
- வெங்காயம்- 2
- தக்காளி- 2
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- ¼ ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- பிரியாணி இலை- 1
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 2
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா - ¼ ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- புதினா- சிறிதளவு
- தயிர்- 50ml
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 4 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதித்ததும் அதில் சேமியா சேர்த்து 70% வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் புதினா கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
தொடர்ந்து தக்காளி சேர்த்து வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறிவிட்டு பின் தயிரையும் சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு கழுவி சுத்தம் செய்துள்ள சிக்கன் சேர்த்து கிளறி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
சிக்கன் வெந்ததும் வேகவைத்த சேமியா சேர்த்து கிளறி நெய் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு இறக்கினால் சுவையான சேமியா சிக்கன் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |