Whatsapp நம்பரை போனில் Save செய்யாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி? சுலபமான ட்ரிக்ஸ் இருக்கு
வாட்ஸ் அப் செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் இருக்கவே செய்கின்றன.
வாட்ஸ் அப்பில் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும், முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் காண்டக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம்.
வாட்ஸ்அப் எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வழி எதுவும் உள்ளதா என்பது பலரின் கேள்வியாக இருக்கும்.
அதற்கு எளிதான வழி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
முதலில் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்ய வேண்டும்.
xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் நம்பரை பதிவு செய்யுங்கள்.
இப்போது எண்டரை அழுத்த வேண்டும்.
திரையில் Continue to Chat என்று பச்சை நிற பட்டன் இருக்கும். அதை அழுத்தவும்.
இப்போது தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்குச் செல்வதை காணலாம்