எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் - தவெகவில் என்ன பதவி?
செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

கடந்த மாதம் தேவர் ஜெயந்தி நிகழ்வில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து, கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக விவாதிப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, செங்கோட்டையைனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், செங்கோட்டையன் நாளை விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்துள்ளார்.
தவெகவில் முக்கிய பதவி
ஒரு கட்சி உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பின்னர், வேறு கட்சியில் இணைந்தால் கட்சி தடை தாவல் சட்டத்தின்படி, அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

இதன் காரணமாக நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ள நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செங்கோட்டையனுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில், செங்கோட்டையனை திமுகவில் இணைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையனை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார்.

செங்கோட்டையன் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை தழுவினார்.
இதன் மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே சட்டமன்ற தொகுதியில் அதிக முறை(8 முறை) வெற்றி பெற்றவர் என்ற பெருமையை செங்கோட்டையன் வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |