இளவரசர் ஹரி மன்னர் சார்லஸ் உதவியாளர்கள் திடீர் சந்திப்பு: நல்ல செய்தி கிடைக்குமா?
மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹரியின் மூத்த உதவியாளர்கள் திடீரென சந்தித்துள்ள நிலையில், ஹரி ராஜ குடும்பத்துடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இளவரசர் ஹரி மன்னர் சார்லஸ் உதவியாளர்கள் திடீர் சந்திப்பு
2020ஆம் ஆண்டு, இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறி, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார்கள்.
ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலும், ஹரி எழுதிய சுயசரிதைப் புத்தகத்திலும் மன்னர் சார்லஸ், ராணி கமீலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் குறித்து மோசமாக விமர்சித்தார்கள் ஹரியும் அவரது மனைவியும்.
இதனால் ஹரி, மேகன் தம்பதியருக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையில் பிளவு உண்டாயிற்று.
அதனால் ராஜ குடும்ப ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலையடைந்த நிலையில், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்துடன் இணைவார் என்னும் நல்ல செய்தி கிடைக்காதா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், மன்னர் சார்லஸ் வாழும் வீட்டுக்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் இளவரசர் ஹரியின் தலைமை தகவல் தொடர்பு அலுவலரான Meredith Maines மற்றும் Liam Maguire ஆகியோர், மன்னர் சார்லசின் தகவல் தொடர்புச் செயலலரான Tobyn Andreaeயை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு ஹரி ராஜ குடும்பத்துடன் இணைவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்னும் கருத்து உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |