சார்லஸ் முடிசூட்டு விழா... ஹரிக்கு குவியும் எதிர்ப்பு: மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் உறுதி
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ஹரிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்ற எதிர்ப்பு குரல் மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மூத்த உறுப்பினர்கள் அச்சம்
முடிசூட்டு விழாவில் ஹரி கலந்துகொண்டால், நாளை ஒருநாள் தாங்களும் அவரது நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில் இடம்பெறும் நிலை வரலாம் என அனைவரும் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி சமீபத்தில் வெளியான தமது நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில், ராஜகுடும்பத்து உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்து பரிமாற்றங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
@reuters
இது மொத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளதுடன், ஹரி மீது அவர்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராஜகுடும்பத்து உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் நாளை ஒரு காலகட்டத்தில் ஹரி புத்தகமாக வெளியிட வாய்ப்பிருப்பதாக இளவரசி ஆன் மற்றும் இளவரசர் எட்வார்ட் ஆகியோர் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி புத்தகமாக வெளியிட வாய்ப்பு
ஹரியின் நினைவுக்குறிப்புகள் வெளியாகி, பெரும் விவாதமாகியுள்ள நிலையில், முதன்முறையாக பொதுமக்களை சந்தித்த மன்னர் சார்லஸ் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரின் முகம் இறுகிப்போயிருந்தது என்றே கூறுகின்றனர்.
@getty
முடிசூட்டு விழாவிற்கு இன்னும் 16 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், ஹரி- மேகன் தம்பதியின் கோமாளித்தனங்களை எதிர்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மட்டுமின்றி, ஹரி- மேகன் தம்பதி தங்களுடன் இருக்கையில், எந்த விவகாரத்தையும் வெளிப்படையாக பேச முடியாத சூழல் உருவாகும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மூத்த உறுப்பினர்கள் விவாதம்
மேலும், ஹரி- மேகன் தம்பதியை முடிசூட்டு விழாவுக்கு அழைக்க வேண்டுமா என இளவரசர் எட்வார்ட் மற்றும் இளவரசி ஆன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் விவாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
@PA
தங்களின் தனிப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் நினைவுக்குறிப்புகள் என அம்பலப்பட வேண்டுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த கருத்துக்கணிப்பில், 31,300 வாசகர்களில் 78% பேர்கள் ஹரி- மேகன் தம்பதியை முடிசூட்டு விழாவிற்கு அழைக்க வேண்டாம் என்றே பதிவு செய்துள்ளனர்.
மேலும், 40 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தத்தில் ஹரி நான்கு புத்தகங்களை வெளியிட இருக்கிறார்.
அதில் தற்போது முதல் புத்தகமே வெளியாகியுள்ளது. இந்த தருணத்தில் ஹரியை முடிசூட்டு விழாவிற்கு அழைத்து, அவரது புதிய புத்தகத்திற்கு தீனியாக வேண்டுமா என்ற கேள்வி ராஜகுடும்பத்து உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.