சீனா தைவான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: மூத்த ராணுவ அதிகாரி திடீர் மரணம்
தைவானின் மூத்த ராணுவ அதிகாரி Ou Yang Li-hsing திடிரென மாரடைப்பால் உயிரிழந்தாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, தைவான் மற்றும் சீனா இடையே கடுமையான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இருநாடுகளும் தங்களது ராணுவத்தை தயார் நிலையில் வைத்து இருக்கும் நிலையில், தைவான் ராணுவத்தின் தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த Ou Yang Li-hsing திடிரென மாரடைப்பால் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
A senior official leading Taiwan's missile production program died of a heart attack, according to official media. Authorities said there was no sign of an external intrusion in the hotel room of 57-year-old Ou Yang
— Yimou Lee (@YimouLee) August 6, 2022
இந்தநிலையில் தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், Ou Yang Li-hsing-வின் ஹோட்டல் அறையை யாரும் உடைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
57 வயதான Ou Yang Li-hsing தைவானின் பல்வேறு ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: @azadke__1/Twitter