செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
இந்தியா, தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி கைது முதல் சிறை மாற்றம் வரை
செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அவர் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |