முதல் வகுப்பு சிறையில் செந்தில் பாலாஜி! அங்கு என்னென்ன சலுகைகள்?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பில் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் உள்ள கைதிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 17 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், அவர் சிறையில் முதல்வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
முதல் வகுப்பு சிறையில் என்னென்ன சலுகைகள்?
* முதல் வகுப்பு சிறையில் உள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் கூடுதலாக சப்பாத்தி வழங்கப்படும்.
* வாரத்தில் 3 நாட்களுக்கு சிக்கன் வழங்கப்படும். கூடுதலாக பால் மற்றும் தேநீர் வழங்கப்படும்
* இதில் தங்கும் சிறை கைதிகளின் இடம் சற்று பெரிதாக இருக்கும். கைதிகள் உடையும் ஆடை இல்லாமல், இவர்கள் சாதாரண ஆடையை அணிந்து கொள்ளலாம்.
* இவர்களுக்கு மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்றவை வழங்கப்படும்
* சிறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களுக்கு பதிலாக வீட்டில் உள்ள தட்டு, ஹார்ட் பாக்ஸ் போன்றவற்றை சிறை கண்காணிப்பாளர் அனுமதி அளித்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* சாதாரண கைதிகள் ரூ.750 வரை உள்ள பொருள்களை சிறை வளாகத்தில் உள்ள உணவகத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், முதல் வகுப்பு கைதிகள் 1000 ரூபாய் வரை பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
* இவர்களுக்கு பிரத்யேக மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மேலும், கூடுதல் பாதுகாப்பு வசதி வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |