3,000 பக்க குற்றப்பத்திரிக்கை ஆவணம் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த 3,000 பக்க குற்றப்பத்திரிகையை தரக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்த அவர், ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 12ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சென்னை உயநீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்திய 3,000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். பின்பு, செந்திபாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு
இந்நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் தாக்கல் செய்த 3,000 பக்க குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவண நகல்களை தரக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மேல்முறையீடானது, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறைக்கு இந்த தகவலை தெரிவிக்கும் படி செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |