அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம், ஆட்கொணர்வு மனு தள்ளுபடி - இருவேறு மாறுபட்ட தீர்ப்பு
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வில் இருவேறு மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் கைது
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதமானது என்றும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்பிலான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருவேறு மாறுபட்ட தீர்ப்பு
இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது தவறு என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் மற்றொரு நீதிபதி பரதசக்கரவர்த்தி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார். இதனால் ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்காக, தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி இந்த மனு தொடர்பிலான வழக்கில் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |