செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தததில் ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில மனுத்தாக்கல் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 21ம் தேதி அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளனர், இதற்காக அடுத்த இரண்டு நாட்கள் இறுதிக்கட்ட உடற்பரிசோதனைகள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
21ம் தேதி அறுவைசிகிச்சை நடந்தால் ஒருசில நாட்கள் ஓய்வு தேவைப்படும், இதனால் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவும் தாமதம் ஏற்படலாம்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மேல்முறையீடு செய்துள்ளது.
அதாவது, அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வருகிற 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |