அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை முதல் அறுவை சிகிச்சைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 7 மணிக்கு அறுவைசிகிச்சை தொடங்கியதாகவும் நான்கு முதல் ஐந்து மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவார் எனவும் தெரிகிறது.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: மா.சுப்பிரமணியன் தகவல்
நெஞ்சுவலி காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்து அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு நாளை அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை சைதாப்பேட்டையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனால் அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு நாளை காலை அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது.
இதற்காக அவரது உடல்நலனும் ஒத்துழைக்கும்படி தேறிவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் யாராவது விசாரணையில் இருந்து காத்துக்கொள்ள இதய அறுவை சிகிச்சை செய்வார்களா என்பதை அமலாக்கத்துறை தான் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |