அறுவைசிகிச்சை பின்.. வெளியானது அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு இன்று காலை அறுவைசிகிச்சை நடந்து முடிந்துள்ளது, சுமார் நான்கு மணிநேரமாக நடந்த சிகிச்சைக்கு பின்னர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை மூத்த இருதயவியல் நிபுணர் ரகுராம் தலைமையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இதயத்தில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையும் சீராக இருக்கிறது.
தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.